மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை  திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு கல்வி நிதியை உடனே வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் தமிழ் மாணவர் மன்றம் அமைப்பாளர் சீனிவாசன் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் மதிமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில்  SFI நிர்வாகிகள் நந்தகுமார், அருண் பாண்டியன், ஜெய்ஹிந்த், முருகன்,உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.