கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே விஜயாபுரி - தெற்கு திட்டங்குளம் -  சாலையில் கற்களை ஏற்றி வந்த லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை  இழந்து சாலையின்  ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டபோது யாரும்  அப்பகுதியில் வரவில்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கல்குவாரி பகுதியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் சாலைகள் சேதம் அடைவது மட்டுமின்றி, மக்கள் உயிர் பயத்துடன்  சாலையில் செல்ல வேண்டிய சூழலில் இருப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . இது விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்