தூத்துக்குடி முள்ளக்காடு அருகே ஆதிரா கேக் ஷாப்பில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதால் பரபரப்பு...?
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே ஆதிரா கேக் ஷாப்பில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்ட புகார்... 9 கிலோ கெட்டுப் போன கேக் பறிமுதல்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளகாடு பகுதியில் கெட்டுப் போன கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த ஆதிரா பேக்கரியின் உணவு பாதுகாப்பு துறை உரிமம் ரத்து செய்யப்பட்டு பேக்கரியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது பேக்கிரியில் நடைபெற்ற சோதனையில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக் ரெண்டு புள்ளி ஐந்து லிட்டர் மில்க் ஷேக் ஐந்து லிட்டர் நெய் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடவடிக்கை.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ளது ஆதிரா பேக்கரி இந்த பேக்கரியில் இன்று காலை பொட்டல் காடு பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் 450 ரூபாய்க்கு கேக்குகள் வாங்கிச் சென்றுள்ளார் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது கேக்குகள் கெட்டுப் போய் இருந்துள்ளது இது தொடர்பாக இசக்கி ராஜா தனது நண்பர்களுடன் ஆதிரா பேக்கரியை முற்றுகையிட்டு புகார் அளித்தார் கெட்டுப்போன கேக் தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கும் தொலைபேசி மூலம் புகார் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்த ஆதிரா பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்தனர் இதில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக்குகள் மற்றும் 2.5 லிட்டர் மில்க் ஷேக் 5 லிட்டர் நெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேக்கரியின் உணவு பாதுகாப்பு துறை உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன் பேக்கரி மற்றும் உணவு பதார்த்தங்கள் விற்பனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர் மேலும் மாவட்டம் முழுவதும் பேக்கரி நிறுவனத்தினர் உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ள விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.