தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள ஹோட்டலில் வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்ததால் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி..!

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்...
தூத்துக்குடி தேவர் புறம் சாலையில் உள்ள சைவ ஹோட்டலில் வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள தேவர்களும் சாலையில் தனியார் காபி ஷாப் மற்றும் ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மூன்று வேலைகளும் உணவு, மற்றும் டீ காபி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஒருவர் ஹோட்டலில் இரண்டு இட்லி மற்றும் வெங்காய வடை வாங்கி உள்ளார். அப்போது அவர் வாங்கிய வெங்காய வடைக்குள் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேறினார்.
பொதுமக்கள் சாப்பிட கூடிய உணவு விஷயத்தில் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.