அங்கன்வாடி மையங்களுக்கு மளிகை - எரிவாயு உருளைகள் நேரடியாக வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், எரிவாயு உரு ளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக கொள் முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.

அங்கன்வாடி மையங்களுக்கு மளிகை - எரிவாயு உருளைகள் நேரடியாக வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், எரிவாயு உரு ளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக கொள் முதல் செய்யப்பட்டு அனைத்து  குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று(ஏப்.17) சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய அதிமுக  உறுப்பினர் அருண்மொழிதேவன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளிக்கையில், “தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்படுகிறது. 1,346 ஆண் குழுந்தைகளும், 4,522 பெண்  குழந்தைகளும் இந்த மையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார். தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 1,800 நபர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. போக்சோ இழப்பீடாக பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.20 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தரமற்ற முட்டைகளா? சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு  முட்டைகளும், அங்கன்வாடி மையங்களுக்கு வாரத்திற்கு ஒரு  முறையும் முட்டை வழங்கப்படு கிறது. மாணவர்களுக்கு வழங்கப் பட்டது தரமற்றதாக இருந்தால் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் முட்டைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குடும்ப வன்முறை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரைக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5,824. அதேபோல், பாதுகாப்பு அலுவலர்களால் பெறப்பட்டது 2,952 ஆக மொத்தம் 8,776 வழக்குகளாகும்.  அதே நேரத்தில்,  2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை  பெறப்பட்டது 6,214, பாதுகாப்பு அலுவலர்களால் 2,846 ஆக மொத்தம் 9060 வழக்குகள் பதிவாகி யுள்ளது என்றும் தெரிவித்திருக் கிறார்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மறுசீரமைப்பு

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 43,094 மையங்க ளில் சமையல் உபகரணங்கள் பழுதடைந்த நிலையிலுள்ள 17,312 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடியில் புதிதாக சமை யல் உபகரணங்கள் வழங்கப் படும். சத்தியவாணி முத்து அம்மை யர் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள்  வழங்கப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்  மறுசீரமைக்கப்படும். திருச்சி, கோவை, சென்னையில் குழந்தை களுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பறை அரசு குழந்தைகள் இல்லம், சென்னை மாவட்டம், ராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ரூ.7  கோடி செலவில் புதிய கட்டடங்கள்  கட்டப்படும். சென்னை சிறுமி யருக்கானஅரசினர் குழந்தைகள் இல்லம் நெல்லை, சென்னை மற்றும் மதுரை அரசின் கூர்நோக்கு இல்லங்களில் பணியாளர் குடியிருப்பு ரூ.10 கோடியில் கட்டப்படும் என்றும் புதிய அறி விப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.