அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன்.. நிலைகுலைந்த நெல்லை போலீஸ்.. திருநெல்வேலியில் துப்பாக்கிச் சூடு

அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன்.. நிலைகுலைந்த நெல்லை போலீஸ்.. திருநெல்வேலியில் துப்பாக்கிச் சூடு

திருநெல்வேலி: நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பாக்குடியில் ஏற்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

திருநெல்வேலி அருகே அரிவாளால் வெட்ட முயன்றதாக சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு (Police Open Fire) நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி பாப்பாகுடியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது... நள்ளிரவு 11 மணியளவில், இரு தரப்புக்கும் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.. இந்த தகவல் போலீசாருக்கு எட்டிய நிலையில், 2 தரப்பினரும் மோதலில் ஈடுபடாமல் இருக்க விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர்..

அதாவது, ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.. அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் இருந்த காவலர்களை நோக்கி அரிவாளுடன் வெட்ட முயன்றுள்ளார்.