நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா!!
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். பள்ளி ஆட்சி மன்ற குழு தலைவரும் நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குருவானவருமாகிய ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பழைய மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங் கலந்து கொண்டார். மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற வேண்டும், நன்கு கல்வி கற்க வேண்டும், எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக வரவேண்டும், கல்வி விளையாட்டு ஆகியவற்றிற்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். விழாவில், பத்தாம் பதினொன்றாம் மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் சேகர் நன்றி கூறினார்.