தூத்துக்குடி மாவட்ட அளவில் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருது: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட அளவில் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருது: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள், விருதுகள் வழங்கிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

2021-2022ஆம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்;இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 07-10-2022 அன்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தூத்துக்குடி சுற்றுலா அலுவலர், தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் கலைமாமணி வில்லிசை கலைஞர் திருமதி.கோ.முத்துலட்சுமி, சிலம்பாட்டக் கலைஞர் கலைமுதுமணி திரு.எம்.சண்முகசுந்தரம், ஓவியக்கலைஞர் கலைநன்மணி திரு.முருகபூபதி;, ஆகியோர் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களாக, வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கீழ்க்காணும் கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

 

அதன்படி, கலை இளமணி விருது பிரிவில் குரலிசை மற்றும் கிராமிய நடனக் கலைஞர் பாலஅய்யனேஸ் வேணி,  பரத கலைஞர் பவதாகினி, குரலிசை கலைஞர் ஜோஷினி ஆகியோரும்,  

கலை வளர்மணி விருது பிரிவில் தவில் கலைஞர் சொக்கலிங்கம், க‌ரகாட்ட கலைஞர் அருண்குமார், நாதஸ்வர கலைஞர் கணேசன், ஆகியோரும், 

கலைச் சுடர் மணி விருது பிரிவில் சிலம்பம் கலைஞர் மணிகண்டன், ஓவியக் கலைஞர் கார்த்திகை செல்வம், தப்பாட்ட கலைஞர் முனைவர் செல்வம் ஆகியோரும்,  

கலை நன்மனி விருது பிரிவில் வில்லிசை கலைஞர் எஸ்.கே.கலைச்செல்வி, தவில் கலைஞர் சுப்புரானந்தம், நாடக எழுத்தாளர் காமராசு ஆகியோரும்,

கலை முதுமனி விருது பிரிவில் நாடகக் கலைஞர் தனசேகரன், நாடகம் மற்றும் வில்லிசை கலைஞர் நகுலன், ஓவியர் ஞானகுரு ஆகியோரும்,

மேற்படி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் 24-03-2023 அன்று மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ள தமிழிசை விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிப்பார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்கள்.