மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்று பெறும் நாட்கள் மாற்றம் : ஆட்சியர் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்று பெறுவதற்கான நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் கோவில்பட்டி தலைமை மருத்துவ மனையிலும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் திருச்செந்தூர் தலைமை மருத்துவ மனையிலும் மருத்துவக்குழுவின் மூலம் மருத்துவ சான்று / அடையாள அட்டையானது வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வியாழக்கிழமை தோறும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, செவ்வாய் கிழமை தோறும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மாதத்தின் கடைசி வெள்ளி அன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் நடைபெற்று வந்த மருத்துவ சான்று /அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டு இனி வரும் காலங்களில் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில்
1.Locomotor Disability 2. Leprosy Cured 3. Cerebral Palsy 4. dwarfism 5. Muscular Dystrophy 6. Acid Attack Victims 7. Blindness 8. Low Vision 9. Deaf and Hard of Hearing 10. Speech and Language Disability 11. Sickle cell Anaemia 12. Talasemia 13. Haemophilia (1.உடல் இயக்க குறைபாடு 2.தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், 3.மூளை முடக்குவாதம், 4.குள்ளத்தன்மை, 5.தசைச்சிதைவு நோய், 6.அமிலபாதிப்புக்குள்ளானோர், 7. பார்வையின்மை, 8. குறை பார்வையின்மை 9.செவித்திறன் குறைபாடு, 10.பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடு,
11. அரிவாளணு இரத்த சோகை, 12. இரத்த அழிவு சோகை 13. இரத்தம் உறையா நோய்) பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1. Intellectual Disability 2. Specific Learning Disability 3. Autism Spectrum Disorder 4. Mental Illness 5. Chronic Neurological Conditions 6. Multiple Sclerosis 7. Parkinson’s Disease 8. Multiple Disability (1. அறிவுசார் / மனவளர்ச்சி குறைபாடு 2.குறிப்பிட்ட கற்றல் குறைபாடு 3.புற உலக சிந்தனை குறைபாடு 4.மனநல பாதிப்பு 5. நாள்பட்ட நரம்பியல் குறைபாடு 6.திசு பன்முகக் கடினமாதல் 7.நடுக்குவாதம் 8.பன்முக குறைபாடு பார்வையின்மையோடு செவித்திறன் குறைபாடு உட்பட) பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். எனவே மருத்துவச்சான்று / ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள் மேற்காணும் தினங்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.