பெண் குழந்தை பாதுக்காப்பு திட்டத்தில் பாண்டு வைத்திருப்பவர்கள் முதிர்வு தொகையினை பெற்றுகொள்ளலாம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
பெண் குழந்தை பாதுக்காப்பு திட்டத்தில் பாண்டு வைத்திருப்பவர்கள் முதிர்வு தொகையினை பெற்றுகொள்ளலாம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
பெண் குழந்தை பாதுக்காப்பு திட்டத்தில் பாண்டு வைத்திருப்பவர்கள் முதிர்வு தொகையினை பெற்றுகொள்ளலாம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தகீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில்:
இன்றைய தினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணை 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக முதியோர் உதவித்தொகை, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து பேசி கூடுதலாக வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன் .முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும், உறுதி அளித்துள்ளார். பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்த பெற்றோர்கள் இரண்டு பெண்கள் குழந்தைகள் திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய பெண் குழந்தைகள் முதிர்வு உதவுத்தொகை விண்ணப்பித்து வைத்திருக்க கூடிய பாண்டு பேப்பரை பெற்றோர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் வந்து பாண்டு பேப்பரின் நகலை ஒப்படைத்து முதிர்வு உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மாநிலம் விட்டு மாநிலம் சென்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றவர்கள், மாவட்டத்திற்குள் வேறு ஒரு விலாசத்திற்கு சென்று இருப்பவர்கள், அனைவரும் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய முதிர்வு உதவித்தொகையை அந்த அந்த மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் பாண்டு பேப்பரின் நகலை எடுத்து கொண்டு நேரடியாக சென்று உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 10,000 பேருக்கும் அதிகமாக இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள். உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்யக்கூடிய நபர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய பட்டு வருகிறது.இதுவரை இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித்தொகைக்கு 231 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதுவரை பெண் குழந்தைகளுக்கான முதிர்வு உதவித்தொகையை பெறாத பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.