தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் – SP மதன் அதிரடி உத்தரவு

தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் – SP மதன் அதிரடி உத்தரவு

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 5 தாலுகா சப்-இன்ஸ்பெக்டர்கள் (SI) நிர்வாக வசதிக்காக மாற்றப்பட்டு புதிய காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாற்ற உத்தரவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மதன், மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து 25.02.2026 அன்று வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

???? மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம்:

  1. கே. செந்தில் குமார் – கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றம்
  2. ஜி. காயத்ரி – கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் இருந்து எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றம்
  3. எஸ். பாஸ்கரன் – ஆத்தூர் காவல் நிலையத்தில் இருந்து எப்போதும்வேன்றான் காவல் நிலையத்திற்கு மாற்றம்
  4. எம். முனியசாமி – எப்போதும்வேன்றான் காவல் நிலையத்தில் இருந்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றம்
  5. எம். ஆண்டனி ராஜ் – ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு மாற்றம்

மேலும், சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக அதிகாரிகளை பணியில் இருந்து விடுவித்து, புதியகாவல் நிலையங்களில் பணியில் சேரும் தேதியை மாவட்ட அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தேர்தல் கால சட்டம்-ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.