தூத்துக்குடியில் பெருந்துறைமுகங்களுக்கிடையே கடற்கரை கைபந்து போட்டி : வஉசி துறைமுக அணி வெற்றி!
அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற கைபந்து மற்றும் கடற்கரை கைபந்து போட்டிகளில் வ.உ. சிதம்பரனார் துறைமுக அணி வெற்றி வாகை சூடியது.
அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற கைபந்து மற்றும் கடற்கரை கைபந்து போட்டிகளில் வ.உ. சிதம்பரனார் துறைமுக அணி வெற்றி வாகை சூடியது.
அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையே கடற்கரை கைபந்து இறுதி போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரை கைபந்து அணியை எதிர்த்து கொச்சின் கடற்கரை கைபந்து அணியினர் மோதினர். இப்போட்டியில் 21-13, 21-13 என்ற புள்ளிகளுடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரை கைபந்து அணியினர் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் கொல்த்தா துறைமுக கடற்கரை கைபந்து அணி விசாகப்பட்டினம் துறைமுக கடற்கரை கைபந்து அணியை எதிர் கொண்டதில் 21-10, 21-15 என்ற புள்ளிகளை பெற்று சியாமா பிரசாத் முகர்ஜி (கொல்கத்தா)துறைமுக கடற்கரை கைபந்து அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற கைபந்து இறுதி போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக கைபந்து அணியினரை எதிர்த்து சென்னை கைபந்து அணியினர் மோதினர். இப்போட்டியில் 25-12, 25-19, 25-13 என்ற புள்ளிகளுடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக கைபந்து அணியினர் வெற்றி பெற்றனர். மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் பாரதீப் துறைமுக கைபந்து அணியும் கோவா துறைமுக கைபந்து அணியும் மோதிக் கொண்டதில் 25-09, 25-14 என்ற புள்ளிகளை பெற்று பாரதீப் துறைமுக கைபந்து அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகத்துடன் இணைந்து நடத்தபட்ட 44வது அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கைபந்து போட்டி மற்றும் 15வது அகில இந்திய பெருந்துறைமுகங்கிடையே நடைபெற்ற கடற்கரை கைபந்து போட்டியின் இறுதி விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல்குமார் ஜா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக விளையாட்டு கழகம் தலைமை இயந்திர பொறியாளர் மற்றும் தலைவர், வி. சுரேஸ் பாபு, வரவேற்புரை ஆற்றினார். மேற்பார்வை பொறியாளர், செயளர், பி. செல்வராஜ், நன்றியுரை ஆற்றினார். இப்போட்டியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (கொல்கத்தா), கொச்சீன் (கடற்கரை கைபந்து), நீயூமங்களுர், கோவா மற்றும் மும்பை ஆகிய 9 பெருந்துறைமுக அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.