வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம்!
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 9வது சர்வதேச யோகாதினமானது ‘வாசுதைவ குடும்பத்திற்கு யோகா’ என்பதை மையமாக கொண்டு ‘ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒருவருங்காலம்’ என்பதையும் உணர்த்தும் வகையில் யோகா செயல்விளக்கம் துறைமுகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

கப்பல், துறைமுகங்கள், மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்முயற்சியாக, இந்திய கடற்சார் சமூகத்தின் சார்பாக ‘யோகா சாகர்மாலா’ (Yoga Sagarmala) என்ற யோகா நிகழ்வை நடத்தியது. துறைமுக சமுதாய கூட்டரங்கில் நடைபெற்ற யோகா தினத்தில்; துறைமுக அதிகாரிகள்ரூபவ் ஊழியர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்து கொண்டனர். ‘வாழும் கலை’ (Art of Living) யை சேர்ந்த யோகா பயிற்சியாளர்கள் சொற்பொழிவு ஆற்றிய பின் யோகா பயிற்சிகளை செய்துகாட்டினர்.
M.V.Red Fin, M.V.Tian Lu, M.V.MSC Elsa மற்றும் M.V.AM ஆகிய வெளிநாட்டுக் கொடியுடன் வ.உ.சி துறைமுகத்தின் தளங்கள் மற்றும் கப்பல்கள் காத்திருக்கும் பகுதிகளின் உள்ள கப்பல்களிலும் யோகா செயல்முறை நடைபெற்றது. மேலும், துறைமுகத்தின் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலை திட்டத் தளம் மற்றும் துறைமுகப் பள்ளி ஆகியவற்றிலும் யோகா செயல்விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. துறைமுக உபயோகிப்பாளர்கள் பிரத்தியேக யோகாசன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.