கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் வழக்கம் போல் செயல்படும்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் வழக்கம் போல் செயல்படும்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக.5ஆம் தேதி மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டாம் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2023 சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்;ர் விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்;ர் விடுமுறை தினமான 05.08.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.