தூத்துக்குடியில் பரபரப்பு! தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 18 பெண்கள் உட்பட 24 பேர் அதிரடி கைது!!
தூத்துக்குடியில் பரபரப்பு! தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 18 பெண்கள் உட்பட 24 பேர் அதிரடி கைது!!
தூத்துக்குடியில் தலைமைத் தபால் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதவாகவும், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பாஜக எம்பி பிரிஜ்பூசன் சரன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவர் கலைசெல்வி, மாவட்ட பொருளாளர் சித்ரா தேவி, மாநகராட்சி கவுன்சிலர் முத்துமாரி, மாவட்ட நிர்வாகிகள் கமலம், சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், அஜ்மல், மாணவர் சங்கம் சார்பில் கிஷோர் உட்பட மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட 24பேரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையின் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.