தூத்துக்குடி பொருட்காட்சிக்கு எதிரான வழக்கு : விசாரணை 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பொருட்காட்சிக்கு எதிரான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது..
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பொருட்காட்சிக்கு எதிரான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது..
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்க தேர் திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு சவேரினா விளையாட்டு திடலில் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தனி நபர் குழுக்கள் நடத்தும் பொருட்காட்சியை சேவியர் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, விளையாட்டு திடலில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், தடையில்லா சான்று வழங்க கூடாது என்றும், மக்களுக்கு பாதுகாப்பான இடத்தினை தமிழக அரசே தேர்வு செய்ய வேண்டும் என்றும் குரூஸ்புரத்தைச் சேர்ந்த இன்னாசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதியரசர் சுந்தர் மற்றும் நீதியரசர் பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் , இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகள் மற்றும் அனைத்து அரசு துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.