குலசேகரப்பட்டினம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!

குலசேகரப்பட்டினம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!

குலசேகரப்பட்டினம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் அருகே உள்ள புதுமனை கோட்டை விளை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சுந்தர் (25), இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திற்கு அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜெயபால் (53), இவர் நேற்று புத்தன் தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவலின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.