போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து துறையில் ஆப்சன்ட் முறையை கைவிடக்கோரி அரசு போக்குவரத்து கழகம் சிஐடியு சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து துறையில் ஆப்சன்ட் முறையை கைவிடக்கோரி அரசு போக்குவரத்து கழகம் சிஐடியு சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறையை பாதுகாக்க களப்பணி செய்த சிஐடியு நிர்வாகிகள் பெரின் பிரண்ஸ், வீரப்பன், சுந்தர்ராஜ், வினோத், சுகுமார் ஆகியோர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளம் பிடித்தம் செய்ததை கண்டித்தும்,  பொது துறையை பாதுகாக்க டெல்லி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளம் பிடித்ததை சரி செய்து விட வேண்டும், தொழிலாளர்களின் விடுப்புகள் மறுக்கப்படுகிறது, அநியாய தண்டனைகள் கைவிட வேண்டும், தேவையான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறை தொகுப்பு புதிய முறையை கைவிட வேண்டும், நிறுத்தப்பட்ட பேருந்துகள் மக்கள் நலன் கருதி இயக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   மத்திய சங்க உதவி தலைவர் வீரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் அரசு போக்குவரத்து சம்மேளன குழு உறுப்பினர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பெரின் பிரின்ஸ்,   மத்திய சங்க உதவி செயலாளர் ராமர், சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான், சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ஜோதி, பொருளாளர் குமரகுருபரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உதவி தலைவர் எட்டப்பன்,  பனிமனை உதவி தலைவர் அருணாச்சலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.