தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பனியாளர்கள் போராட்டம் : துணை மேயர் மாமூல் கேட்பதாக குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், வாகண ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 20 க்கும் மேற்பட்ட வாகணங்கள் மூலம் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வார்டுகளில் சுமார் 80 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் பணியாற்றி வருகின்றனர். மேற்படி தூய்மை பணியாளர்களிடம் வாகணம் ஒன்றுக்கு ரூபாய்.100 எஸ்.ஹெட்ச்.ஓ மேயர் மற்றும் துணை மேயர் பெயரை கூறி பெருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் மாமூல் தர மறுத்தும், சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரியும் தூய்மை பணியாளர்கள், வாகண ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திறம்பட செயல்பட்டு வரும் மேயர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் இந்த சம்பவத்திற்கு மேயர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.