தூத்துக்குடிக்கு லாரிகளில் வந்த தென்னை மரங்கள் : கடல்வழியாக மாலத்தீவுக்கு ஏற்றுமதி!!
தூத்துக்குடியில் இருந்து சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக கப்பலில் மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கற்கள், மணல், சிமென்ட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக கோவையில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் தென்னை மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் காயாமல் இருப்பதற்காக நவீனமுறையில் உரம் மண் மூலம் பதப்படுத்தப்பட்டு பாலித்தீன் பைகள் மூலம் வேர்கள் காயாதவண்ணம் பாதுகாக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனை மாலத்தீவில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கு நவீனமுறையில் நடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.