தூத்துக்குடியில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!!
தூத்துக்குடியில் சங்கு குளி தொழிலாளர்களுடன் சென்ற 15 வயது சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான்.
தூத்துக்குடியில் சங்கு குளி தொழிலாளர்களுடன் சென்ற 15 வயது சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தான்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து சங்கு குழி தொழில் செய்வதற்காக நாட்டுப்படகில் 5 பேர் புறப்பட்டுச் சென்றனர் நேற்று காலை 11 மணி அளவில் கரையில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் கடலில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென திரேஸ் புரத்தை சேர்ந்த பிரிஸ்டன் மகன் ஜெரோசின் (15), என்பவர் கடலில் மூச்சு திணறி இறந்து விட்டார்.
இதுகுறித்து தருவைகுளம் மறைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.