தூத்துக்குடி மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்களை அகற்ற‌ ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்களை அகற்ற‌ ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 48 மணி நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்களை அகற்ற‌  ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தூத்துக்குடி தேர்தல் நடத்தும் அலுவல‌ருமான லட்சுமிபதி செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில்

இந்திய தேர்தல் ஆணையம் பொது தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தூத்துக்குடி மாவட்ட மக்களவை தேர்தல் முதல் கட்டத்தில் நடைபெற உள்ளது.  தூத்துக்குடி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கி மார்ச் 23 ஆம் தேதி வரை நடைபெறும்.  மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு, மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும், ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்களிக்கும் நாள், அதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளாகும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் 3 மணி முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 54 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு அறை நிறுவப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள்  கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 196 அல்லது 9486454714 என்ற வாட்ஸ் ஆப் என்னிலும் புகார்களை  தெரிவிக்கலாம். அதேபோல் cvigil என்ற  ஆப் மூலமாக வும் தெரிவிக்கலாம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள  அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்களை  48 மணி நேரத்திற்குள் அழிக்க  அல்லது அகற்ற பட வேண்டும், அதேபோல் தனியார் , அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசியல் விளம்பரங்கள், பதாகைகளை 72 மணி நேரத்தில் அழிக்க  அல்லது அகற்ற வேண்டும், அரசியல் கட்சி கொடிகள், சிலைகள் அனைத்தையும் துணிகளால் மூடிட வேண்டும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண் வாக்காளர்களும் 7,39,720 பெண் வாக்காளர்களும் 215 மூன்றாம் பாலினத்தோர் ஆகிய அனைவரும் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 21,105 புதிய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

1622 வாக்கு சாவடிகள் உள்ளன. மேலும் 2  துணை வாக்கு சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை, வைத்துள்ளோம். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் 8016 மாநில அரசு அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 286 பதட்டமான வாக்குச்சாவடிகள்   , 2 கவனிக்க தக்க வாக்குச் சாவடிகள் உள்ளன.  மக்களவை பொது தேர்தலை அமைதியாக நடைபெற  அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

என கூறினார்.