பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; மாணவி படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்!

பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; மாணவி படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மாணவி படுகாயம் அடைந்தார். 

நெல்லை பாளையங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் மகன் ஜான் டேவிட் (21). செங்கோட்டை ராணா குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் மகள் சுமதி (20) இவர்கள் இருவரும் இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்கள். இருவரும் தூத்துக்குடியில் ஒரு கம்பெனியில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு வந்துவிட்டு மீண்டும் பைக்கில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி - நெல்லை ரோடு வாகைகுளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜான் டேவிட் பரிதாபமாக இருந்தார். படுகாயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி சென்ற திருச்சி துறையூர் செந்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் ஜெனிட்குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.