திருச்செந்தூர் அமலி நகர் பகுதியில் நான்கு நாட்களாக நடைபெற்ற மீனவர்கள் போராட்டம் வாபஸ்..!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர்கள் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் பகுதி மீனவர்கள் கடல் அரிப்பு ஏற்படுவதால் படகுகள் மற்றும் வலை பின்னும் கூடங்கள் மேலும் வீடுகள் சேதமாவதால் அரசு உடனடியாக தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்
இதைத் தொடர்ந்து இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் அமலி நகர் மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஊர் கமிட்டியினர் பங்குத்தந்தை ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்ததாவது:
திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் 195 படகுகள் உள்ளன. அமலிநகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தவிர்த்திடும் நோக்கில் விரைந்து தூண்டில் வளைவு அமைத்திடக்கோரி கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அமலிநகர் ஊர் கமிட்டி தலைவர், உறுப்பினர்கள், பிரதிநிதிகள், பங்கு தந்தை ஆகியோரை அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவாக் ள், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அமலிநகர் பகுதியில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார்கள். மேலும் திருச்செந்தூர் கோவில் பகுதி மற்றும் ஜீவாநகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு அமைப்பு கட்டப்படும் என்று மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தூண்டில் வளைவு அமைக்க கடலோர மேலாண்மை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு; நிலுவையில் உள்ளது. வழக்கில் தீர்வு காண்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் தீர்வு கிடைத்தவுடன் விரைவில் தூண்டில் வளைவு மற்றும் கடல் அரிப்பு தடுப்பு அமைப்பு ஏறப் டுத்தப்படும் என்று மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டத்தினை கைவிட்டு நாளை இரவு முதல் கடலுக்கு செல்வோம் என உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார்.
சமாதான கூட்டத்தில் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் திரு.அமல்சேவியர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.புஹாரி, தூத்துக்குடி மீன் பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் திரு.சரவணகுமார், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு.விஜயராகவன், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.சுவாமிநாதன், அமலிநகர் மீனவ பிரதிநிதிகள் ஊர் தலைவர் திரு.பாஸ்கர், பொருளாளர் திரு.குளோரிடான், ஊர் கமிட்டி உறுப்பினர்கள் திரு.ராஜா, திரு.ஹெருடஸ், திரு.ஆனஸ்டன், அமலிநகர் பங்கு தந்தை திரு.வில்லியம் சந்தானம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியினை முழு விடியோவாக கான....