துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட மாணவரணி  சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது.                    

 தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியலின் பெயரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார் தலைமையில் கோரம்பள்ளம் TDTA பேரின்பம்மாள் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் உள்ள அலெக்ஸ் கைலாச முதியோர் இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பிரசாத், தங்க மாரிமுத்து தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.