தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மாநகராட்சி பணிகளை தனியார் காண்ட்ராக்ட்க்கு விட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி பணிகளை தனியார் காண்ட்ராக்ட்க்கு விட்டதை ரத்து செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும், மாநகராட்சி தினக்கூலி தூய்மை பணியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ஆம் தேதிக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர் ஓட்டுநர் உள்ளிட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூபாய் 10 ஆயிரம் வழங்கிட வேண்டும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் மாநகராட்சியில் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணிபுரிந்த தூய்மை பணியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர் நலன் பாதுகாத்திட திருநெல்வேலி மாநகராட்சி போல் தனியார் காண்டராக்ட் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், சுகாதார பணியாளர்களுக்கு மழை கோர்ட், கையுறை, தளவாடக் கருவிகள் முறையாக வழங்கிட வேண்டும், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு செய்திட வேண்டும், தொழிலாளர் நலன் காத்திட தமிழக அரசு அரசாணை எண் 152 ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு நவம்பர் 2 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ஊர வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் நடைபெற்றது.
இதற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் கணேசன், ஜான் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் இல .ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியூ மாநில செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, உப்பு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கரன்,ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வளர்ச்சி துறை ஊழியர் சங்க இணை செயலாளர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார்.