அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத் துறை மனு தள்ளுபடி - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவிட அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் 2001-06 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ண மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்ந்தது. 2-2-2022 அன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் வழிகாட்டு மதிப்புள்ள (சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகம்) சொத்துகளை முடக்கியது.
இந்த சூழலில் கடந்த 2023 ஏப்ரல் 18 ஆம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மாநில அரசின் வழக்கறிஞருக்கு உதவுவதற்காக எழுத்துபூர்வமான ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறையை அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
இந்த மனு, விசாரணக்கு எடுக்காமல் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், ‘அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை 80% விசாரணை முடிந்துவிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த மூன்றாவது அமைப்பின் குறுக்கீடும் தேவையில்லை” என்று வாதிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இன்று 03.07.2024-தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், அமலாக்கத் துறையின் கோரிக்கையை நிராகரித்து, மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரம் தூத்துக்குடி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE