விளையாட்டுக்கு ஊக்கம், இளைஞர்களுக்கு உற்சாகம்..கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த ஒட்டப்பிடாரம் MLA..

விளையாட்டுக்கு ஊக்கம், இளைஞர்களுக்கு உற்சாகம்..கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த ஒட்டப்பிடாரம் MLA..

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நடுவை காமராஜர் நகர் லவ்லி கிரிக்கெட் கிளப் சார்பில் 6-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதி ஆட்டம், மாதா நகர் அணி மற்றும் புதியம்புத்தூர் லவ்லி கிரிக்கெட் கிளப் அணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்றது. இந்த இறுதி போட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா அவர்கள் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

போட்டியில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்த மாதா நகர் அணியினருக்கு ரூ.30,001/- பரிசுத்தொகையை, ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் திரு. எல். ரமேஷ் அவர்கள் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த புதியம்புத்தூர் லவ்லி கிரிக்கெட் கிளப் அணியினருக்கு பேச்சுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்  செந்தூர்மணி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவன், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர்  பொன்பாண்டி ரவி, வர்த்தக அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, இளைஞர் அணி தங்கதுரை, நெசவாளர் அணி செல்வம்,ஈசன் சுரேஷ், தொழிலாளர் அணி அந்தோணி,தனுஷ் பாலன்,  மேலும் கிளை செயலாளர்கள் லிங்கராஜ்,  சற்குணம் பாண்டியன், பூவலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.