முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தங்கும் அறைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தோட்டத்தில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தங்கும் அறைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தோட்டத்தில் தங்கும் அறைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது அக்கநாயக்கன்பட்டி கிராமம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இவருக்கு சொந்தமான தோட்டம் அக்கநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அறிவழகன் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் தோட்டத்தில் இருந்த தங்கும் அறைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த தங்கும் அறை மேற்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானதுடன் உள்ளே இருந்த கட்டில் மற்றும் பாத்திரங்கள் சேதமாகின இரவில் யாரும் தங்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அறிவழகன் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  தேர்தல் முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் புளியம்பட்டி காவல்துறையினர் வழ‌க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தோட்டத்தில் மர்ம நபர்கள்  தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.