தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை: வாழ்வாதாரம் பாதிப்பு!
வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மண்ணார் வளைகுடா பகுதி மற்றும் குமரி கடல் பகுதியில் வருகிற ஐந்தாம் தேதி வரை காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசகூடும் மேலும் அவ்வப்போது சுழற் காற்றானது 65 கிலோ மீட்டர் வரை வீசபகூடும் மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் விசைப்படகுகள் பத்திரமாக அருகே உள்ள துறைமுகங்களுக்கு சென்று கரை திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பைபர் படகுகள் ஐந்தாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்நது உள்ளனர். மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதி நடைபெறாததால் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.