தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு கட்டுரை & பேச்சுப் போட்டி... ரூ.10,000 முதல் பரிசு அறிவிப்பு!

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு கட்டுரை & பேச்சுப் போட்டி... ரூ.10,000 முதல் பரிசு அறிவிப்பு!

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகள் 14.07.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணிக்கு, தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இதில் பங்கேற்கலாம்.

போட்டித் தலைப்புகள்:

???? கட்டுரைப் போட்டி:

"தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை"

???? பேச்சுப் போட்டி:

1. நான் விரும்பும் தமிழ்நாடு

2. அன்றைய மெட்ராஸ் மாகாணம் – இன்றைய நவீன தமிழ்நாடு

3. இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு

4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு

5. வீரம் செறிந்த தமிழ்நாடு

பரிசுத் தொகைகள்:

???? முதல் பரிசு – ₹10,000 ???? இரண்டாம் பரிசு – ₹7,000 ???? மூன்றாம் பரிசு – ₹5,000 ???? வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

போட்டிகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9159668240 மற்றும் 9842553496 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.