தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 19 வயது இளைஞர் கைது – 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 19 வயது இளைஞர் கைது – 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். 1¼ கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது  கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகமது நியாஷ் (19) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை  போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.