பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க கோரி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் 12வது நாளாக போராட்டம் – நாளை தமிழகம் முழுவதும் சாலை மறியல் அறிவிப்பு

பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க கோரி அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் 12வது நாளாக போராட்டம். நாளை தமிழகம் முழுவதும் சாலை மறியல்.

தூத்துக்குடி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போன்று, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு மற்றும் உயர் கல்வித் துறையை கண்டித்து, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் 12வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மூட்டா (MUTA) சங்கம் சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணி மேம்பாட்டு ஊதியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தொடர் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று 12வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் உயர் கல்வித் துறையை கண்டித்து, தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் இருந்து பேரணியாக வந்து, வாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு தொடர்ந்து கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், நாளை நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

இதுகுறித்து பேசிய சிவஞானம், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்,

“எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு செவி சாய்க்கும் வரை போராட்டம் தீவிரமடையும்” என தெரிவித்தார்.