தூத்துக்குடியில் பரபரப்பு… வாக்குச்சாவடி அருகே முகம் மறைத்த காவலர்! மக்கள் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் பரபரப்பு… வாக்குச்சாவடி அருகே முகம் மறைத்த காவலர்! மக்கள் அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வரிசையில் நின்று தங்களின் வாக்குரிமையை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அருகே நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முகத்தை முழுவதுமாக கர்சீப் கொண்டு மறைத்தபடி பணியில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.

வாக்குச்சாவடிக்கு வருகை தந்த வாக்காளர்கள், “இவர் உண்மையில் காவல்துறையினரா?” என்ற சந்தேகத்துடன் பார்த்ததுடன், அதிகாரிகள் முகம் மறைத்து பணியாற்றுவது ஏன் என்ற கேள்வியும் எழுப்பினர்.

தேர்தல் போன்ற  சூழ்நிலையில், பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரி இவ்வாறு முகத்தை மறைத்துக் கொள்வது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது விதிமுறைக்கு உட்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விவகாரம் குறித்து விளக்கம் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

⚠️ இந்த சம்பவம் தற்போது தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.