விளையாட்டு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! SDAT ஸ்போர்ட்ஸ் ஹோஸ்டல் சேர்க்கை 2026–27 தொடக்கம்

விளையாட்டு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! SDAT ஸ்போர்ட்ஸ் ஹோஸ்டல் சேர்க்கை 2026–27 தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த விளையாட்டு பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2026–2027 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சேர்க்கைக்கான தகுதி:

17 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

UG Admission:

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PG Admission:

முதுநிலை படிப்பில் சேர இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சர்வதேச அளவில் சாதனை புரிந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பம்:

13.03.2026 முதல் www.sdat.tn.gov.in⁠� இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

????️ கடைசி நாள்: 26.03.2026 மாலை 5.00 மணி

???? தகவல் தொடர்புக்கு: 9514000777

விளையாட்டு தேர்வு நடைபெறும் இடங்கள்:

???? ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை – தடகளம், பளுதூக்குதல், ஜுடோ, வாள்விளையாட்டு, கால்பந்து (ஆ), கையுந்துபந்து

???? நேரு உள்விளையாட்டரங்கம் – கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து (பெ), கைபந்து

???? மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் – ஹாக்கி, கபாடி

விளையாட்டில் ஆர்வமுள்ள மற்றும் திறமை கொண்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.