முத்தையாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது!
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை புகார் அளித்த 8 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை புகார் அளித்த 8 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த இருளாண்டி மகன் ராதாகிருஷ்ணன் (வயது 33). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூன் 21 ஆம் தேதி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பரான பாலமுருகன் ஆகிய இரண்டு பேரும் முத்தையாபுரம் பல்க் ஜங்சன் அருகே உள்ள மதுக்கடைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லையாம். தொடர்ந்து அக்கம்பக்கத்திலும், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காத நிலையில் ஜூன் 23ஆம் தேதி அன்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேற்படி ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்தையாபுரம் தங்க பாரதி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த குஞ்சரவேல் என்பவரது மகன் உமையார் தங்கம் என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது மேற்படி இரு சக்கர வாகனத்தை திருடிய உமையார் தங்கம் என்பவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.