இந்த அநியாயம் பண்றீங்களேடா!.. விஷயம் புரியாம வச்ச 'மாமன்னன்' கவர் போட்டோவை ரிமூவ் பண்ண ஃபகத் பாசில்!..

மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் பஹத் பாசில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்திலும் நடித்திருந்தார்.

விக்ரம் படத்திற்கு பின் தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலும், ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படமும் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் சாதி வெறி பிடித்த நபராகவும், இறுதியில் தோற்றுப்போகும் கதாபாத்திரத்திலும் ஃபகத் பாசில் நடித்திருந்தார். திரைப்படம் தியேட்டரில் வெளியான போது மாரிசெல்வராஜ் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக போய் சேர்ந்தது.

ஆனால், ஓடிடியில் இப்படம் வெளியான பின், சாதி ஆதிக்க வெறி கொண்ட அந்த ரத்தினவேல் வேடத்தை பல சாதிகாரர்களும் கையில் எடுத்து அவர் எங்கள் சாதிதான் என பெருமை பேசுவது போல, தங்களின் சாதி பாடலை ஃபகத் பாசில் காட்சிகளோடு சேர்த்து எடிட் செய்து அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர #fahadfazil என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது.

சாதிவெறியர்கள் செய்த இந்த காரியத்தால் மாரிசெல்வராஜ் சொல்ல வந்த கருத்தே இதில் நீர்த்துப்போனது. பல சாதிகாரர்களும் தங்களின் சாதி பெருமை பேசும் பாட்டை எடிட் செய்து ரத்தினவேல் எங்கள் சாதிதான் என மார்தட்டிக்கொண்டனர். இது புரியாமல் #fahadfazil டிரெண்டிங் என மாரி செல்வராஜே டிவிட் செய்து வந்தார்.

ஒருபக்கம், இதில் சந்தோஷப்பட்ட ஃபகத் பாசிலோ ரத்திவேல் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர், முகநூல் கவர் போட்டோவாக வைத்தார். அதன்பின்னர்தான் அவருக்கு இது சாதி வெறியர்கள் செய்த வேலை என தெரியவந்தது போல.

இந்நிலையில், அனைத்து கவர் போட்டோக்களையும் நீக்கிவிட்டார்…