தூத்துக்குடி 2-ஆம் கேட் (மேலூர்)-ல் மே 31வரை ரயில்கள் நின்று செல்லாது: ‍ தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மே 31ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள் இனி நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி 2-ஆம் கேட் (மேலூர்)-ல் மே 31வரை ரயில்கள் நின்று செல்லாது: ‍ தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மே 31ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள் இனி நின்று செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை- தூத்துக்குடி இடையிலான இரட்டை வழி பாதையில் பணிகள் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையமானது புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில் மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியும் இன்னும் முடிவடையவில்லை.

இந்த பணியை கடந்த மாதம்  இறுதிக்குள் முடித்து மே  1-ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தபோதும் சில பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மே 31ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள் இனி நின்று செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து  ரயில்களும் இந்த  மாதம் மே 31 ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.