"₹2 லட்சம் பண மாலை சர்ச்சை..! அதிமுக–பாஜக விதிமுறைகளை மிதித்ததா?"

"₹2 லட்சம் பண மாலை சர்ச்சை..! அதிமுக–பாஜக விதிமுறைகளை மிதித்ததா?"

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவின் பண்டார விளை பகுதியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதனுக்கு, திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ₹500 நோட்டுகளால் கட்டப்பட்ட சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான பண மாலையை  அணிவித்துள்ளார். இந்த நிகழ்வினை பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி மற்றும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திமுக அமைப்பாளர் செல்வகுமார், சம்பவத்தின் புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் முறையான புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் காலத்தில் ₹50,000-க்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்ற கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், வெளிப்படையாக ₹2 லட்சம் பணத்தை மாலையாக பயன்படுத்தியிருப்பது தேர்தல் விதிமுறைகள் மீறலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் அரசியல் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.