தூத்துக்குடியில் ஏப்ரல் 15ம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

தூத்துக்குடியில் வருகிற 15ம் தேதி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஏப்ரல் 15ம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

தூத்துக்குடியில் வருகிற 15ம் தேதி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். 

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்  கந்தசாமிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. 

தொடர்ந்து, ஏப்ரல் 15ம் தேதி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டமும், ஏப்ரல் 30ம் தேதி தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் மாவட்ட தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டமும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நடைபெற இருக்கிறது.  ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரத்தை பெரிதாக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமல்ல. 

இந்த நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை, அநீதிகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என்பதால் காங்கிரஸ் கட்சி இதுமாதிரியான போராட்டங்களை முன்னெடுக்கிறது. இந்த நாட்டினுடைய ஜனநாயக குரலை நெரிக்கின்ற பாசிக பாஜகவை கண்டிக்கிற வகையில் ஓர் அணியாக இந்திய அளவில் திரண்டு இருக்கிற எதிர்கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார். பேட்டியின் போது, மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர் செந்தூர்பாண்டி, ஐசன் செல்வா, மாவட்ட கலைப்பிரிவு தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரபு ரசிகர் மன்ற தலைவர் குமார முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்