லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளுக்கான நான்காவது திறன் மேம்பாட்டு ஆசிரியர் பயிற்சி

லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளுக்கான நான்காவது திறன் மேம்பாட்டு ஆசிரியர் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் 2025–26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி  05.12.2025 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அடல் இன்னோவேஷன் மிஷன் உடன் இணைந்து செயல்படும் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 20 அடல் டிங்கரிங் லேப் (ATL) பள்ளிகளிலிருந்து மொத்தம் 32 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட இந்த திட்டம்,  மாணவர்களின்  திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் திறன், கிரிட்டிகல் திங்கிங் திறன் உள்ளிட்ட முக்கியக் கற்றல் திறன்களை மேம்படுத்துதலை  நோக்கமாக கொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அதைத் தொடர்ந்து தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுவதன் மூலம் சிறந்த அறிவியல் மாதிரிகளை உருவாக்க உதவுவர்.

இவ்வாண்டின் முதல் பயிற்சி ஜூலை மாதத்தில் நிறைவுற்ற நிலையில், இரண்டாவது பயிற்சி தூத்துக்குடி சத்யா பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸில்  05.12.2025 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் 32 ஆசிரியர்கள் பங்கேற்று ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் பயிற்சி பெற்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் திரு. சிதம்பரநாதன் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சத்தியசீலன்  ஆகியோர் கலந்து கொண்டனர்  

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பேசும்போது , மாணவர்கள் மத்தியில் அறிவியல் மாதிரிகளை உருவாக்க அடல் டிங்கேரிங் ஆய்வு கூடத்தை திறமையாக பயன்படுத்தி பல்வேறு அறிவியல் தொடர்பான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினார்

மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் பேசும்போது,  இன்ஸ்பியர் போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு 32-வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், இந்த ஆண்டு முதல் 10 இடத்திற்க்குள் முன்னேறியிருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் வழங்கும் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் பயிற்சி முறைகளைப் பயன்படுத்தி முதல் இடத்தை அடைய அனைத்து பள்ளிகளும் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறவேண்டும் என கூறினார்.

மேலும், இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல் மாதிரிகளை உருவாக்குவது குறித்த தொழில்நுட்ப பயிற்சியும், பள்ளிகளில் இந்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள எனர்ஜி கிளப் செயல்பாடுகள் குறித்த  பயிற்சியும்  ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது .

பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் மற்றும் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.