தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை., ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் அறிவிப்பால் அங்கன்வாடி பணியாளர்கள் அதிர்ச்சி!

அங்கன்வாடி பணியாளர்களுக்கு நாளை (ஜூலை 7) அரசு விடுமுறை இல்லை என ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் அறிவிப்பால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை 7ஆம் தேதி நாளை திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை இல்லை. ஜூலை 7ஆம் தேதி அனைத்து அங்கன்வாடி மையங்களும் திறந்து வைக்க வேண்டும் என அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபி தெரிவித்துள்ளார். இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கொறிக்க விடுத்துள்ளனர்.
மேலும், சமூகநலத்துறை அமைச்சராக உள்ள தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இருந்தும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்காதது தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்களும், சங்கத்தினர் கூறி வருகின்றனர்.