துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்: தொண்டு நிறுவன உரிமையாளர் கோரிக்கை!!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக விரோதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என ஆதவா தொண்டு நிறுவன உரிமையாளர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக விரோதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என ஆதவா தொண்டு நிறுவன உரிமையாளர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தொண்டு நிறுவன நிர்வாகிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து ஏழை மாணவர்களுக்கு போதிய கல்வி கிடைக்கும் வகையில் நிதி உதவி வழங்குகிறது. அது மட்டும் இன்றி இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை ஆதவா தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தை ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவருடைய மகன் பால குமரேசன் நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரான இவர் ஆறுமுகநேரி பகுதியில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனை எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.
இதன் காரணமாக சமூக விரோதிகளால் மிரட்டப்பட்டுள்ளார். தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆறுமுகநேரி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கஞ்சா விற்பனைக்கு எதிராக போராட்டம் நடத்திய தொண்டு நிறுவன இயக்குனர் பால குமரேசன் மீது கோபம் கொண்ட சில சமூக விரோதிகள் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு ஹோட்டலில் இருந்த பாலகுமாரேசன் மீது கத்தி, அருவாள், பனை மட்டை போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால் பலத்த காயமடைந்த இவர் திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் ஊர் திரும்பி உள்ளார். இவரது ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக குணமடையாத தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் இவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் அவருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இவருடைய தொண்டு நிறுவனத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, மனு அளித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்த ஆதவா தொண்டு நிறுவன இயக்குனர் பாலகுமாரேசன் கூறுகையில் "கடந்த மாதம் என் மீது கொலைவெறி தாக்ககுதல் நடத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட யாரையும் கைது பண்ணல. அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிக்கூடத்தையும் மாணவர்களையும் மேம்படுத்திட்டு இருக்கிறேன்.
என்னோட உயிருக்கு இவ்ளோ பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கு. இன்னைக்கு அரசியல் கட்சிகள் யார் இருந்தாலும் சரி போலீஸ் பாதுகாப்பு கொடுக்குறாங்க ஆனா எனக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை. நான் உயிரோடு இருக்கணும் என்னை நம்பி இருக்கிற குடும்பத்துக்கு நான் வாழனும் அதுக்கு ஆசைப்படுறேன் அதனால இன்னைக்கு மாவட்ட ஆட்சியில இருக்க புகார் கொடுக்க வந்திருக்கும் எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கனும் இல்லையென்றால் துப்பாக்கி லைசென்ஸ கொடுங்கன்னு கேட்டுகொள்கிறேன். அதனால என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு மாவட்ட நிர்வாகம் எனக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
+++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...