சாத்தான்குளம் அருகே வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு!
சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இரு பிரிவாக செயல்பட்டதால் பிரச்னை காரணமாக கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் நீதிபதிகளால் மூடப்பட்டது. இதனைடுத்து வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து சங்க தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்வு பெற்ற வழக்குகைஞர் சங்கத் தலைவர் கல்யாண்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களும் மூடப்பட்டு இருந்த சங்க அறையை திறக்க வலியுறுத்தி வந்தனர்.
திறக்கப்படாமல் இருந்ததால் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிபதி அவர்களுக்கு வழங்கிய பரிந்துரைத்தது. அதன்படி மாவட்ட நீதிபதி, சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கும், நீதித்துறை நடுவருக்கும் பரிந்துரைப்படி சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலஅரசி, குற்றவியல் நீதித்துறை நடுவர் கலையரசி ரீனா ஆகியோர் சங்க அறையை நேற்று திறந்து வைத்தனர்.
இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.கல்யாண்குமார், சங்க செயலர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜேம்ஸ்ஜேசுதுரை, வழக்கறிஞர்கள் மணிமாறன், தியோனிஷ்சசி மார்சன், முத்துராஜ், ஈஸ்டர்கமல், குமரேசன்,கணேஷ், பிரின்ஸ், பிளசிங், பிரேம்குமார், பெண் வழக்கறிஞர்கள் ஜெசிந்தா,ராஜேஸ்வரி,கௌசல்யா,பால வினிதா உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். சங்க அலுவலகம் திறக்க உதவிய நீதிபதிகள் கோபாலஅரசி, கலையரசி ரீனா, மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் பிரபு ஆகியோருக்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.