தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு – கோவில்பட்டி கிளை சிறையில் பாதுகாப்பு குறைபாடு? கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு – கோவில்பட்டி கிளை சிறையில் பாதுகாப்பு குறைபாடு? கைதி தப்பி ஓட்டம்

அடிதடி வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை யூரணி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் நிரஞ்சன் (18) என்பவர் விளாத்திகுளத்தில் நடந்த அடிதடி மற்றும் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு சாப்பாட்டிற்காக சமையலறை சென்ற நிலையில் சமையலறை வழியாக  ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.