கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 பெண்களுக்கு இலவச தையல் மிஷின்: கனிமொழி எம்.பி வழங்கினார்!

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 பேருக்கு தையல் மிஷின்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு என்.பெரியசாமி அறக்கட்டளை மற்றும் மகளிர் திட்டம் ஒருங்கிணைப்புடன் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் இயந்திரத்துடன் சான்றுகளும் மற்றும் தையல் பயிற்சி பெற்ற 62 பெண்கள் மொத்தம் 100 பேருக்கு தையல் மிஷின் வழங்கும் விழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு  100 பேருக்கு தையல் மிஷின் வழங்கி பேசுகையில் "மக்களுக்கான சமூகநீதிக்காக தொடர்ந்து கலைஞர் உழைத்தார். திராவிட இயக்கத்தில் பெண்களின் உரிமைக்காவும் எல்லோரும் சமமாக வாழவேண்டும். என்பதற்காக சட்டம் இயற்றினார். காவல் துறையில் பெண்கள் பணி உருவாக்கப்பட்டது இப்படி சாதனைகளை அடுக்கி கொண்டே செல்லலாம் கலைஞர் ஆட்சியின் தொடர்ந்த திட்டங்களில் மூலம் இன்று முதல்வர் ஆட்சிக்கு திராவிட மாடல் அடித்தளமாக அமைந்தது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றார்.

விழாவில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.