தூத்துக்குடி தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சை… “நள்ளிரவு பிரச்சாரம்” விவகாரம் – அதிமுக வேட்பாளர் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டு! அதிகாரிகள் எங்கே?

தூத்துக்குடி தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சை… “நள்ளிரவு பிரச்சாரம்” விவகாரம் – அதிமுக வேட்பாளர் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டு! அதிகாரிகள் எங்கே?

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அரசியல் சூழல் தீவிர பரபரப்பை எட்டியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லபாண்டியன், தேர்தல் விதிகளை வெளிப்படையாக மீறியதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிடைத்த தகவலின்படி,

இரவு 10 மணிக்குப் பிறகும் தூத்துக்குடி மாநகராட்சி 53 ஆவது வார்டுக்குடபட்ட முத்தையாபுரம் பகுதிகளில்  சுற்றி, பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தெளிவாக விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறிய இந்த நடவடிக்கை, சட்டத்தை சவால் செய்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக,

50-க்கும் மேற்பட்ட கட்சியினர் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து, “அதிமுக வேட்பாளர் வாழ்க!” என முழக்கமிட்டபடி நகரம் முழுவதும் சத்தமிட்டு சுற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு நேர அமைதியை குலைக்கும் விதமாக நடைபெற்ற இந்த பிரச்சாரம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி எழுப்புவது —

???? தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் இல்லாதது.

விதிமுறை மீறல் நடைபெறும் நேரத்தில் அதிகாரிகள் காணாமல் போனது,

இது சாதாரண அலட்சியமா? அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பா? என்ற சந்தேகத்தை தூண்டியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதமாக மாறியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன:

⚠️ இரவு 10 மணிக்கு மேல் நடந்த பிரச்சாரத்திற்கு வழக்கு பதிவு செய்யப்படுமா?

⚠️ அதிமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

⚠️ அதிகாரிகள் ஏன் கண்காணிப்பில் தோல்வியடைந்தனர்?

தூத்துக்குடி தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில்,

“நள்ளிரவு பிரச்சாரம்” விவகாரம் அரசியல் வெடிகுண்டாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.