தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் கார்த்திக் (22), இவர் தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 05.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மினிபஸ் தாளமுத்து நகர் நோக்கி சென்றபோது 2பேர் குடிபோதையில் மினி பஸ்ஸின் படிக்கட்டில் தொங்கி பிரச்சனை செய்துள்ளனர்.
இதனை கார்த்திக் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் கண்டக்டரை தாக்கியுள்ளனர். இது குறித்து கார்த்திக் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 8மணி அளவில் 2 பேரும் அரிவாளுடன் குறிஞ்சி நகரில் பஸ் டிப்போவில் பிரச்சனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக டிப்போ மேனேஜர் லிங்கப்பன் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோயில்பிள்ளை விளை, கலைஞர் நகரைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் முத்து மாரியப்பன் (20) மற்றும் ஆரோக்கியபுரம் ஐயர்விளை ஆதிமுத்து தினேஷ் (22) ஆகிய 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.