தூத்துக்குடி 3-ம் கேட் மேம்பாலத்தின் கீழ் மரனக்குழி : சீரமைக்க சிபி எம் கோரிக்கை..!

தூத்துக்குடி 3-ம் கேட் மேம்பாலத்தின் கீழ் மரனக்குழி : சீரமைக்க சிபி எம் கோரிக்கை..!

தூத்துக்குடி மூன்றாம் கேட் மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்டுள்ள குழியினை சீரமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மூன்றாம் கட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். 

மேம்பாலத்தில்  இடது பக்கம் திரும்பகூடாது என்று  போக்குவரத்து துறையின் சார்பில் ஃபோர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டை பயன்படுத்துகின்றனர். பாலத்திற்கு கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் தற்போது மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள்  விபத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே 

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குழியின் மழை நீரை  உடனடியாக அகற்றி அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.