வாகண ஓட்டிகளே உஷார்.. இதை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: தூத்துக்குடி RTO எச்சரிக்கை!

தூத்துக்குடியை சேர்ந்த இருசக்கர, நாண்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

துணை போக்குவரத்து ஆணையர், திருநெல்வேலி அவர்களின் உத்தரவின் படி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள், அதிக ஒலி எழுப்பும் பல குரல் ஒலிப்பான்கள், மாற்றி அமைக்கப்பட்ட ஹேண்டில்பார்கள், மற்றும் தலைக்கவசங்களில் கேமரா பொருத்தி இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதமாக ரூபாய்.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

மேலும் இலகு ரக‌ நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் முன்னிருக்கை பின்னிருக்கியிலிருந்து பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும். இது குறித்து இனி வருங்காலங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.